
புதிய குடிநீர் குழாய் பதிக்கும் பணிகளை தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டார்
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட டபுள்யு.ஜி.சி ரோட்டில் நடைபெற்று வரும் புதிய குடிநீர் குழாய் பதிக்கும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டார்ஹ
இந்தப் பணிகள் மூலம் டபுள்யு.ஜி.சி ரோடு, ஜெய்லானி தெரு, குமாரர் தெரு, பங்களா தெரு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு சீரான குடிநீர் வழங்கப்படும். மேலும், இந்த பணிகள் காரணமாக ஏற்பட்ட குண்டும், குழியுமான சாலையும் சீரமைத்து தரப்படும் என்று மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்துள்ளார்.
நிகழ்வில், காங்கிரஸ் கட்சியின் மாநகர செயலாளர் முரளிதரன், மாநகர மீனவரணி அமைப்பாளர் டேனி, பகுதி பிரதிநிதிகள் பிரபாகர் மற்றும் ஜேஸ்பர் ஆகியோர் உடனிருந்தனர்.
CATEGORIES மாவட்டம்