
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஒவ்வொரு திங்கட்கிழமையும் வழக்கம்போல் தொடர்ந்து நடத்தப்படும் – தூத்துக்குடி கலெக்டர் லட்சுமிபதி தகவல்
தேர்தல் நன்னடத்தை விதிகள் இந்திய தேர்தல் ஆணையத்தால் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதை தொடர்ந்து மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஒவ்வொரு திங்கட்கிழமை நாளன்றும் தொடர்ந்து நடத்தப்படும் – மாவட்ட ஆட்சித்தலைவர் கோ.லட்சுமிபதி என தெரிவித்துள்ளார்.
தேர்தல் நன்னடத்தை விதிகள் இந்திய தேர்தல் ஆணையத்தால் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதை தொடர்ந்து மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இனிவருங்காலங்களில் ஏற்கனவே நடைமுறையிலிருந்தவாறு அரசு விடுமுறைகள் இல்லாத ஒவ்வொரு திங்கட்கிழமை நாளன்றும் தொடர்ந்து நடத்தப்படும். அவ்வகையில் வரும் திங்கள் கிழமை அதாவது 10.06.2024 அன்று முற்பகல் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் பொது மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடத்தப்படும். அக்கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து சார்நிலை அலுவலகத்தை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொள்வார்கள்.
எனவே அன்றைய தினம் பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திலுள்ள மக்கள் குறைதீர்க்கும் நாள் பிரிவில் பதிவு செய்து மாவட்ட ஆட்சித் தலைவரிடம் நேரடியாக அளிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் கோ.லட்சுமிபதி, தெரிவித்துள்ளார்.