
தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் அருகே நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனத்தை திருடிய 2 பேர் கைது – இரு சக்கர வாகனம் மீட்பு.
தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி பகுதியைச் சேர்ந்த நித்யானந்தராஜ் மகன் வினோத்குமார் (29) என்பவர் கடந்த 19.05.2024 அன்று தனது இருசக்கர வாகனத்தை தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் அருகே நிறுத்திவிட்டு பின்னர் வந்து பார்த்தபோது அந்த இருசக்கர வாகனம் காணாமல் போயுள்ளது.
இதுகுறித்து வினோத்குமார் அளித்த புகாரின் பேரில் தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டதில் தூத்துக்குடி சவேரியார்புரம் பகுதியைச் சேர்ந்த மங்களபாண்டி மகன் தங்கதுரை (36) மற்றும் பசுவந்தனை முல்லுப்பட்டி பகுதியைச் சேர்ந்த அந்தோணிசாமி மகன் முனியசாமி (47) ஆகிய இருவரும் சேர்ந்து மேற்படி வினோத்குமாரின் இருசக்கர வாகனத்தை திருடியது தெரியவந்தது.*
*இதனையடுத்து தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. முத்துவீரப்பன் வழக்குப்பதிவு செய்து எதிரிகளான தங்கதுரை மற்றும் முனியசாமி ஆகிய இருவரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து திருடப்பட்ட ரூபாய் 80,000/- மதிப்புள்ள இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தார். மேலும் இதுகுறித்து தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.*