
தூத்துக்குடியில் குடும்ப தகராறு காரணமாக ரயில் முன் பாய்ந்து கணவன் தற்கொலை
தூத்துக்குடி தருவைகுளத்தைச் சேர்ந்தவர் தங்கப்பழம் நாடார் மகன் அந்தோணி சதீஷ்குமார். நில புரோக்கர். கணவன்- மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, தனது மனைவி மற்றும் குழந்தைகளை பிரிந்து தனியாக வேறொரு பெண்ணுடன் தூத்துக்குடியில் ஒரு வீட்டில் 3 மாதங்களாக வசித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் மீளவிட்டான் ரயில் நிலையம் அருகில் மணியாச்சியில் இருந்து தூத்துக்குடி வந்த ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்த தூத்துக்குடி ரயில்வே காவல் நிலைய போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவ்விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
CATEGORIES மாவட்டம்