ஐ.எஸ்.பயங்கரவாதி சைஃபுல்லா சுட்டுக்கொலை
உ.பி., மாநிலம் லக்னோவில் பயங்கரவாதி பதுங்கி இருப்பதாக வந்த தகவலை அடுத்து பயங்கரவாத தடுப்பு பிரிவு படையினர், ஒரு கட்டடத்தை சுற்றி வளைத்துள்ளனர். துப்பாக்கிச்சூடு நடந்து வந்தது. இந்நிலையில் அந்த பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டார்.
நாடு முழுவதும் தீவிர சோதனை
பயங்கரவாத தடுப்பு பிரிவு படையினர் கூறுகையில் பயங்கரவாதியை உயிருடன் பிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தவிர நாட்டின் பல்வேறு பகுதிளில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் ம.பி மாநிலத்தில் 5 பேர் வரையிலும், கான்பூரில் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் பலரை தேடி வருகிறோம் என்றார்.
சைஃபுல்லா சுட்டுக்கொலை
தற்போது லக்னோவில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளில் சைபுல்லா என்பவன் ஐஎஸ் இயக்கத்துடன் தொடர்பு இருப்பதாகவும், ம.பி.,யில் நடைபெற்ற ரயில் விபத்து சம்பவங்களிலும் உஜ்ஜய்னி ரயில் விபத்து சம்பவங்களிலும் தொடர்பு இருக்க கூடும் என போலீசார் கூறினர். சைஃபுல்லா லக்னோவில் கட்டடம் ஒன்றின் பதுங்கியிருந்தார். அவனை உயிருடன் பிடிக்க தேசிய பாதுகாப்புபடையினர் , பயங்கரவாத எதிர்ப்புபடையினர் தீவிர முயற்சி மேற்கொண்டனர். 5 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் சைஃபுல்லா சுட்டுக்கொல்லப்பட்டார்..