திருச்செந்தூரில் ஆடு திருடர்கள் 3 பேர் கைது – திருடப்பட்ட ஆடு மற்றும் சரக்கு வாகனம் பறிமுதல்

திருச்செந்தூரில் ஆடு திருடர்கள் 3 பேர் கைது – திருடப்பட்ட ஆடு மற்றும் சரக்கு வாகனம் பறிமுதல்

திருச்செந்தூர் சண்முகபுரத்தைச் சேர்ந்தவர் சுந்தரம் மனைவி பேச்சித்தாய் (41). இவர் தனது வீட்டில் ஆடுகள் வளர்த்து வருகிறார். நேற்று மேய்ச்சலுக்கு விட்டிருந்த ஒரு ஆட்டை மர்ம நபர்கள் திருடிச் சென்று விட்டனர். ன இதுகுறித்து பேச்சித்தாய் திருச்செந்தூர் தாலுகா காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் உதவி ஆய்வாளர் சுந்தர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார்,

விசாரணையில், திருச்செந்தூர் வீரபாண்டிய பட்டினத்தை சேர்ந்த பட்டுராஜா மகன் விஜி (எ) விஜி கோபால் (30), முருகன் மகன் பாலமுருகன் என்ற சடையன் (45), சண்முக புரத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் சேர்மதுரை (33) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஆடு மற்றும் திருடுவதற்கு பயன்படுத்திய சரக்கு வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

 

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )