தூத்துக்குடியில் கல்லூரி மாணவருக்கு கத்திக்குத்து- இருவருக்கு போலீஸ் வலைவீச்சு

தூத்துக்குடியில் கல்லூரி மாணவருக்கு கத்திக்குத்து- இருவருக்கு போலீஸ் வலைவீச்சு

தூத்துக்குடி  ஆரோக்கியநாதபுரத்தைச் சோ்ந்த கல்லூரி மாணவரான ஜேசுராஜன் மகன் அஜீன் (19). இவர், தனது நண்பரிடம் செல்போன் விளையாட்டுக்கான ‘ஐடி’யைக் கொடுத்துள்ளாராம். அதை அஜீன் தனது நண்பா்களுக்குக் கொடுத்தாராம். இதனால் அவா்களிடையே தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

அப்போது, அங்கிருந்த மேலஅலங்காரதட்டு லாசா் நகா் பகுதியைச் சோ்ந்த போவாஸ் என்ற நாகராஜன் மகன் ஷியாம் டேனியல் (22), 18 வயது சிறுவன் ஆகியோா் சோ்ந்து அஜீனை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவலறிந்த தாளமுத்து நகர் போலீசார் காயமடைந்த கல்லூரி மாணவர் அஜீனை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனா். மேலும் வழக்குப் பதிந்து கத்தியால் குத்தி விட்டு தலைமறைவாக உள்ள இருவரை தேடி வருகின்றனர்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )