
பக்ரீத் திருநாளை முன்னிட்டு தூத்துக்குடி ஈத்கா தோட்டத்தில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் அன்பு, சகோதரத்துவம், உலக அமைதி வேண்டி சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்
பக்ரீத் திருநாளை முன்னிட்டு தூத்துக்குடி ஈத்கா தோட்டத்தில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் அன்பு, சகோதரத்துவம் வேண்டி சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
இறைதூதர் இப்ராஹீம் தியாகத்தை போற்றும் வகையில் தியாகத் திருநாளாம் பக்ரீத் பண்டிகை, ஹஜ் பெருநாள் என்றும் அழைக்கப்பட்டு கொண்டாடப்படுகிறது.
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடியில் உள்ள ஈத் கா தோட்டத்தில் தூத்துக்குடி ஜாமியா பள்ளிவாசல் தலைமை இமாம் அப்துல் அலிம் தலைமையில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு அன்பு, சகோதரத்துவம், உலக அமைதி வேண்டி சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். தொழுகைக்குப் பின் ஒருவருக்கு ஒருவர் ஆறத்தழுவி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். இதைத்தொடர்ந்து இஸ்லாமியர்கள் தங்கள் வீடுகளுக்கு சென்று ஆடுகளை பலியிட்டு குருபானி வழங்கினர்.
ஆட்டுக்கறியை 3 பங்காக பிரித்து ஒன்று உறவினருக்கு ஒன்று ஏழைக்கு ஒன்று தனக்கு என மூன்று பிரித்து ஏழைகளுக்கு பங்கிட்டு வழங்கினார்.