ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையால் குறைந்தது பணப்புழக்கம்!
ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையால், பணப்புழக்கம் 11.73 லட்சம் கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
குறைவு:
இதுகுறித்து நிதித்துறை இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் லோக்சபாவில் தெரிவித்ததாவது: 2014, மார்ச் 31ம் தேதி ரூ12.82 லட்சம் கோடியாகவும், 2015, மார்ச் 31ம் தேதி ரூ.14.28 லட்சம் கோடியாகவும் இருந்த நாட்டின் பணப்புழக்கம், கடந்த ஆண்டு மார்ச் 31ம் தேதி(31-03-2016) வரை, 16.41 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்திருந்தது. இதனையடுத்து கடந்த நவ.,8ம் தேதி, கறுப்பு பணத்தை ஒழிப்பதற்காக மத்திய அரசு கொண்டு வந்த ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையின் காரணமாக, தற்போது (2017 மார்ச்,3 வரை) நாட்டின் பணப்புழக்கம் 11.73 லட்சம் கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
புழக்கத்தில்..
2017, பிப்ரவரி மாதம் வரை, 1.9 பில்லியன் மதிப்பிலான 5 ரூபாய் நாணயங்களும், 1.3 பில்லியன் மதிப்பிலான 10 ரூபாய் நாணயங்களும் புழக்கத்தில் உள்ளன. மேலும் 2.6 பில்லியன் 10 ரூபாய் நோட்டுகளும், 3.6 பில்லியன் 20 ரூபாய் நோட்டுகளும் புழக்கத்தில் உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.