தமிழகத்தில் நிம்மதி இல்லாத ஆட்சி; ஸ்டாலின்
தமிழகத்தில் நிம்மதி இல்லாத ஆட்சி நடைபெற்று வருவதாக தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் பேசினார்.
கொளத்தூர் தொகுதியில் நடந்த திருமண விழா ஒன்றில் ஸ்டாலின் பேசியதாவது: தமிழகத்தில் நிம்மதி இல்லாத ஆட்சி நடக்கிறது. எப்போது என்ன நடக்கும் என்ற நிலையில் தான் அதிமுக ஆட்சி நடக்கிறது. அதிமுக, சசிகலாவுக்கா ஒபிஎஸ்.,க்கா என ஒரிருநாளில் தேர்தல் ஆணையம் தெரிவித்து விடும். ஜெ.,, மருத்துவமனையில் இருந்த போது அமைச்சர் விஜயபாஸ்கர் பத்திரிகையாளர்களை சந்தித்தாரா? ஜெ., மருத்துவ அறிக்கையை தனது துறை சார்ந்தவர் மூலம் வெளியிடுகிறார். இவ்வாறு அவர் பேசினார்.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை ஒன்றில்: தமிழகம் கடனில் மூழ்கும் அபாயம் உள்ளது. நிதிநிலை குறித்த ஆய்வறிக்கையில், வருவாய் குறைந்துள்ளது தெரியவந்துள்ளது. வருவாய் பற்றாக்குறை அதிகமாகியுள்ளது. மூலதன முதலீடு குறைந்துள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.