மசால் தோசை
என்னென்ன தேவை?
இட்லி அரிசி – 3 கப்
அவல் – அரை கப்
உளுந்து – முக்கால் கப்
வெந்தயம் – 2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
முதல் நாள் இரவு இட்லி அரிசியில் வெந்தயம் சேர்த்து ஊறவைத்துக்கொள்ளுங்கள். உளுந்தைத் தனியாக ஊறவையுங்கள். மறுநாள் காலை அரிசியை நன்றாக அரையுங்கள். 20 நிமிடம் ஊறவைத்த அவலை அரிசியுடன் சேர்த்து அரையுங்கள். உளுந்தைத் தனியாக அரைத்து, அரிசி மாவுடன் சேர்த்து நன்றாகக் கலக்குங்கள். தேவையான அளவு உப்பு சேர்த்துக் கரைத்துவையுங்கள். இந்த மாவை ஆறு மணி நேரம் புளிக்கவைத்து, தோசைகளாகச் சுட்டெடுங்கள்.