பன்னீர் பக்கம் செல்லும் சசிகலா அணியினர்
முன்னாள் அ.தி.மு.க., அமைச்சர் வில்வநாதன், நேற்று முன் தினம்(மார்ச் 12), காவேரிப்பாக்கத்தில் இறந்து போனார். சசிகலா ஆதரவு அ.தி.மு.க., அணியில் இருந்த வேலூர் மாவட்ட நிர்வாகிகள் மரணத்துக்கு செல்லவில்லை. இதனால், கட்சியினர் பலருக்கும் தலைமை மீது கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
மரணம்
முன்னாள் அ.தி.மு.க., அமைச்சர் வில்வநாதன், நேற்று முன் தினம், காவேரிப்பாக்கத்தில் இறந்து போனார். இவர் கடந்த 2001-06 காலகட்டத்தில், ஜெயலலிதா அமைச்சரவையில் அமைச்சராகவும், பல ஆண்டு காலம் கட்சியின் மாவட்டச்செயலாளராகவும் இருந்துள்ளார்.
துக்கத்துக்கு செல்லவில்லை
அவர் சமீப காலமாக கட்சியில் இருந்து முழுமையாக ஓரங்கட்டப்பட்டு, கடும் வருத்தத்தில் இருந்து வந்தார். அந்த வருத்தத்திலேயே, இறந்து விட்டார். கட்சித் தலைமையால ஓரங்கட்டப்பட்டு வைத்திருந்த இவரின் இறப்புக்கு செல்லலாமா? கூடாதா? என்ற தயக்கம், மாவட்டம் முழுவதிலும் அ.தி.மு.க.,வினருக்கு ஏற்பட்டது. அதனால், கட்சியினர் பெரும்பாலும், துக்கத்துக்கு செல்லவில்லை.
பன்னீர்செல்வம் அணிக்கு
அவரது மரணத்துக்கு அ.தி.மு.க., சார்பில் யாரும் செல்லாதது, கட்சியினர் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதனால், சசிகலா ஆதரவு அ.தி.மு.க., அணியில் இருந்த வேலூர் மாவட்ட நிர்வாகிகள், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள், பஞ்சாயத்துத் தலைவர்கள் என பலரும், பன்னீர்செல்வம் அணி பக்கம் செல்லத் தயாராக இருப்பதாகக் கூறப்படுகிறது.