
தூத்துக்குடியில் ஜூலை 6ம் தேதி வரை வழக்கறிஞர்கள் நீதிமன்றம் புறக்கணிப்பு மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடியில் வருகிற 6ம் தேதி வரை நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
இது குறித்து தூத்துக்குடி வழக்கறிஞர்கள் சங்க தலைவர் தனசேகர் டேவிட் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது,
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் முடிவின்படி புதிய *BNS, BNSS, BSA* ஆகிய சட்டங்களை முழுமையாக திரும்பப்பெற வலியுறுத்தி 02.07.2024 செவ்வாய்க்கிழமை முதல் 06.07.2024 சனிக்கிழமை வரை தூத்துக்குடி வழக்கறிஞர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் அனைவரும் நீதிமன்ற பணிகளுக்கு செல்லாமல் இருப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி 05.07.2024 வெள்ளிக்கிழமை பகல் 12.00 மணிக்கு நீதிமன்றம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்
தூத்துக்குடி நீதி மன்றத்தில் வழக்கறிஞர்கள் நேற்று 1ம் தேதி முதல் தொடர் கோட் புறக்கணிப்பு போராட்டம் நடத்தி வருவதால் வழக்குகள் விசாரணை நடைபெறவில்லை இதனால் வழக்குகள் அனைத்தும் மறு தேதியிட்டு ஒத்திவைக்கப்பட்டுள்ளது இதுபோல் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ள ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம், கோவில்பட்டி, சாத்தான்குளம் ஆகிய ஊர்களிலும் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். வழக்கறிஞர்கள் தொடர் போராட்டத்தால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.