ஆந்திரா, தெலங்கானா ஏடிஎம்களில் பணம் தட்டுப்பாடு: இயந்திரத்தை உடைக்க முயன்றவர் கைது
ஆந்திரா மற்றும் தெலங்கானா வில் உள்ள பெரும்பாலான ஏடிஎம் களில் ‘பணம் இல்லை’ என அறிவிப்பு பலகைகள் தொங்க விடப்பட்டுள்ளன. இதனால் பொது மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
2-வது சனிக்கிழமை, ஞாயிறு, ஹோலி பண்டிகை என தொடர்ந்து வங்கிகளுக்கு விடுமுறை விடப் பட்டதால் இந்த நிலை ஏற்பட்ட தாக கூறப்படுகிறது. சில ஏடிஎம் களில் 2,000 ரூபாய் நோட்டுகள் மட்டுமே இருந்ததால் சில்லறை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
திருப்பதி மற்றும் திருமலையில் உள்ள 90 சதவீத ஏடிஎம்-களில் பணம் இல்லாததால் பல வெளி மாநில பக்தர்கள் தங்களிடம் உள்ள டெபிட், கிரெடிட் கார்டு களை உபயோகித்து வருகின்ற னர். எனினும் கிராமப்புறங்களில் இருந்து வரும் பக்தர்கள் கடுமை யாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், ஹைதராபாத் தில் உள்ள கோட்டி பகுதியில் ஹமீத்கான் என்ற இளைஞர் பெடரல் வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் இயந்திரத்தில் நேற்று பணம் எடுக்கச் சென்றார். அதில் பணம் இல்லாததால் ஆத்திரம் அடைந்த அவர், இயந்திரத்தை உடைக்க முயன்றார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீஸார் ஹமீத்கானை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.