1.8 கோடி டவுன்லோட் செய்யப்பட்ட ‛பீம்’ மொபைல் ஆப்
டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு கொண்டு வந்த ‛பீம்’ ஆப், இதுவரை 1.8 கோடி பேரால் டவுன்லோட் செய்யப்பட்டுள்ளது.
‛பீம்’ ஆப்:
செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பைத் தொடர்ந்து, ரொக்கப் பயன்பாட்டை குறைக்கும் வகையில், டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், ‘பீம்’ என்ற பெயரில், மொபைல் ஆப் ஒன்றை, கடந்த டிச.,30ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அறிமுகப்படுத்தினார். இந்நிலையில் இதுவரை ‛பீம்’ மொபைல் ஆப், 1.8 கோடி டவுன்லோட் ஆகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிக டவுன்லோட்:
இதுகுறித்து நிடி ஆயோக் சி.இ.ஒ., அமிதாப் காந்த் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்ததாவது: தற்போது வரை ‛பீம்’ ஆப் 18 மில்லியன் (1.8 கோடி) டவுன்லோடு செய்யப்பட்டு அனைத்து சாதனைகளையும் தகர்த்துள்ளது. இவ்வாறு அவர் தனது பதிவில் தெரிவித்தார்.