தலை குனிந்த கலெக்டர்…. சந்தோஷப்பட்ட பொதுபணித் துறையினர்!!
சீமை கருவேல மரம் அகற்றுதல் குறித்து ஆலோசனைக் கூட்டம் திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் அரங்கில் கலெக்டர் சுந்தரவள்ளி தலைமையில் நடந்தது. அப்போது பங்கேற்ற பொது பணித்துறை நீர் வள ஆதார அமைப்பிடம் கேள்வி எழுப்பிய சுந்தரவள்ளி நீதிமன்ற உத்தரவையும், இயற்கை வளம் குறித்து பேசினார்.அப்போது நீர் வள ஆதார அமைப்பின் திருவள்ளுர் மாவட்ட செயற் பொறியாளர் அசோக், எஸ்டிஓ செல்வக் குமார் ஆகியோர் எழுந்து திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள 1700 எக்டர் பரப்பளவில் உள்ள நீர்நிலைகள், ஏரிகள், ஆறுகள்?குளங்கள், குட்டைகள், பொது இடங்களில் சீமை கருவேல மரங்கள் ஆள் உயரத்திற்கு வளர்ந்துள்ளது. இதை அகற்ற வேண்டும் என்றல் 13.5 கோடி மட்டும் தேவைப்படுகிறது. பணத்தை ஒதுக்கிடு செய்தால் உடனடியாக சீமை கருவேல மரத்தை அடியோடு அகற்றி விடலாம் எனக் கூறினார்கள்.இதற்கு பதில் அளித்த கலெக்டர் சுந்தரவள்ளி பணமே இல்லை என்ன செய்யலாம் எனக் கேட்க பதில் இல்லாதால் இது குறித்து பிறகு ஆலோசனை செய்யலாம் என கூட்டத்தை முடித்தார்.