எடப்பாடியார் முதுகில் குத்தி, அதிமுகவை அழிக்க பாஜக முயற்சி – எம்.ஜி.ஆர் மன்றம் கண்டனம்

எடப்பாடியார் முதுகில் குத்தி, அதிமுகவை அழிக்க பாஜக முயற்சி – எம்.ஜி.ஆர் மன்றம் கண்டனம்

தூத்துக்குடி எடப்பாடியார் முதுகில் குத்தி அ.தி.மு.க.வை அழிக்க பாஜக முயற்சிப்பதாக மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணை செயலாளர் சத்யா இலட்சுமணன் மற்றும் துணைச் செயலாளர் மிக்கேல் ஆகியோர் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதுகுறித்து கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் தொடங்கிய அண்ணா தி.மு.க.வை அவரது மறைவிற்கு பின் ஜெ. கட்டிக்காத்த பின் அதனை தொடர்ந்து பொதுச்செயலாளர் எடப்பாடியார் தலைமையில் வழி நடத்தப்படுகிறது. 53 ஆண்டுகளில் 30 ஆண்டுகள் ஆட்சி அதிகாரத்தில் இருந்த இயக்கம் அண்ணா தி.மு.க.தான்.

தமிழகத்தில் பி.ஜே.பிக்கு அரசியல் அங்கிகாரம் பெற்று தந்த இயக்கம் அண்ணா தி.மு.க.தான். பொதுச்செயலாளர் எடப்பாடியார் தலைமையில் அண்ணா தி.மு.க.வை பி.ஜே.பி. கட்சி அழிக்க முயற்சி செய்தது. பி.ஜே.பி. பினாமிகளான ஓ.பி.எஸ். டி.டி.வி. தினகரன் சசிகலாவை கழகத்தை உடைக்க பார்த்தது. நாடாளுமன்ற தேர்தலில் பி.ஜே.பி. சேர்ந்த அண்ணாமலை விரைவில் அண்ணா தி.மு.க. டி.டி.வி.தினகரன் கைக்கு வந்து விடும் என்கிறார் அண்ணாமலை.

பி.ஜே.பி கட்சி வந்தது முதல் அந்த கட்சிக்கு தோல்விதான் பரிசு. 2019 நாடாளுமன்ற தேர்தலில் 323 இடங்களில் வென்ற பி.ஜே.பி 2024 எம்.பி.தேர்தலில் 240 இடங்களில் வென்று மைனாரிட்டி அரசை பி.ஜே.பி நடத்துகிறது. கர்நாடகா எம்.எல்.ஏ. தேர்தல் பொறுப்பாளராக அண்ணாமலை நியமனம் செய்யப்பட்டார். ஆட்சியில் இருந்த பி.ஜே.பி. அகற்றப்பட்டு காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது. 11 கட்சி கூட்டணி வைத்து பிஜேபி ஓட்டு சதவிகிதம் கூடிவிட்டது சொல்லி மக்களை ஏமாற்றுகிறது.

தமிழகத்தில் 23 இடங்களில் பி.ஜே.பி. டெப்பாசிட் இழப்பு. பி.ஜே.பி தலைவர்கள் அண்ணா தி.மு.க.விற்கு அழைப்பு சொல்லி பொதுச் செயலாளர் எடப்பாடியர் முதுகில் குத்தி அ.தி.மு.க.வை அழிக்க முயற்சி செய்தது. பி.ஜே.பி. ஜால்ரா ஓ.பி.எஸ்.டி.டி.வி தினகரனை வைத்து பச்சோந்தி அண்ணாமலை அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்தை முடக்க முயற்சி செய்தார். அதிமுகவை உடைத்து இரட்டை இலை சின்னத்தை முடக்கினால் 2026 சட்டமன்ற தேர்தலில் பி.ஜே.பி.வெற்றி பெறலாம் என கனிப்பு போட்டு வருகிறது.

தமிழகத்தில் 8 முறை பிரதமர் மோடி மத்திய அமைச்சர். மாநில முதல்வர்கள் வந்தும் தமிழக மக்கள் அவர்களை புறக்கணித்து விட்டனர். 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அண்ணா திமுக மிகப் பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியில் அமரும். துரோகிகள் எண்ணம் நிறைவேறாது. இவ்வாறு கூறியுள்ளனர்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )