மே, ஜூனில் பிரதமர் மோடி அமெரிக்கா செல்ல திட்டம்
அமெரிக்க அதிபர் டிரம்ப்பை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக மே முதல் ஜூலை வரை இருமுறை பிரதமர் மோடி அமெரிக்கா செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து மத்திய வெளியுறவு வட்டார அதிகாரிகள் தெரிவிக்கையில், ‛அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றுள்ள டொனால்ட் டிரம்ப்பை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக பிரதமர் நரேந்திர மோடி மே மற்றும் ஜூலை மாதங்களில் பிரதமர் மோடி அமெரிக்க செல்ல திட்டமிட்டுள்ளார்.’ எனத் தெரிவித்தனர்.
அமெரிக்காவின் புதிய விசா கொள்கையால் அமெரிக்காவில் பணிபுரியும் லட்சக்கணக்கான இந்திய ஐ.டி., வல்லுனர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. மேலும் அமெரிக்காவில் இந்தியர்களின் மீது தாக்குதலும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த சூழலில் பிரதமர் மோடி டிரம்ப்பை சந்திக்க இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
பிரதமர் மோடி, மே கடைசியில் பெர்லினுக்கும், ஜூன் முதல் வாரத்தில் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கிற்கும் சுற்றுப்பயணம் செல்ல உள்ளார். எனவே அவரது அமெரிக்க பயணம், மே முதல் வாரத்தில் மற்றும் ஜூன் கடைசியில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.