அரசு மருத்துவமனைக்கு பாதுகாப்பு அதிகரிப்பு
ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில், டாக்டர்கள் மீது தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, கூடுதலாக, 30 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
சென்னை, ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில், நோயாளி ஒருவரின் உறவினர்கள், பணியில் இருந்த பயிற்சி டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் மீது, தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தால், 16, 17ம் தேதிகளில், மருத்துவமனை வளாகம் போர்க்களமானது.
இந்த போராட்டத்தில், பணியில் உள்ள டாக்டர்களுக்கு பாதுகாப்பு உள்ளிட்ட, பல கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன. இந்த கோரிக்கைகள் ஏற்றதை தொடர்ந்து, போராட்டம் கைவிடப்பட்டது.
இந்நிலையில், ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில், 30 போலீசார் பாதுகாப்பு பணியில்
ஈடுபட்டுள்ளனர். கூடுதலாக, 30 போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். விரைவில், கண்காணிப்பு கேமரா பொருத்தவும், மருத்துவமனை நிர்வாகம் திட்டமிட்டு உள்ளது.