ஏப்ரல் 1 முதல் ஸ்மார்ட் ரேஷன் கார்டு: உணவுத் துறை அமைச்சர் காமராஜ் அறிவிப்பு
ஸ்மார்ட் ரேஷன் அட்டை வழங்கும் திட்டத்தை வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைப்பார் என உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் நேற்று பட் ஜெட் மீதான விவாதத்தின்போது இது தொடர்பாக நடைபெற்ற விவாதம்:
கே.ஆர்.ராமசாமி (காங்கிரஸ்): ரேஷன் கடைகளில் பருப்பு, பாமாயில், மண்ணெண்ணெய் போன்ற அத்தியாவசியப் பொருட் கள் வழங்கப்படவில்லை. பல இடங்களில் வறுமைக்கோட்டுக்கு கீழே இருக்கும் குடும்பங்களை வறுமைக்கோட்டுக்கு மேலே இருப்பவர்கள் என தவறாக குறிப்பிட்டுள்ளனர். இதுபோன்ற குறைகளைக் களைய வேண்டும். அத்தியாவசியப் பொருட்களை தட்டுப்பாடின்றி வழங்க வேண்டும்.
அமைச்சர் காமராஜ்: ரேஷனில் அனைத்துப் பொருட்களும் தட்டுப் பாடின்றி வழங்கப்படுகின்றன. இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் பொது விநியோகத் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் தமிழகத்தோடு போட்டிபோட முயன்ற சத்தீஸ்கர் மாநிலம் தோல்வி அடைந்துள்ளது. மத்தியில் காங்கிரஸ் – திமுக கூட் டணி ஆட்சி காலத்தில் இருந்து தமிழகத்துக்கான மண்ணெண் ணெய் ஒதுக்கீடு பெருமளவில் குறைக்கப் பட்டது.
எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டா லின்: காங்கிரஸ் ஆட்சியில் மண் ணெண்ணெய் ஒதுக்கீடு குறைக் கப்பட்டதை நான் மறுக்கவில்லை. ஆனால், அன்றைய முதல்வர் கருணாநிதி மத்திய அரசுக்கு கடிதம் எழுதியும், உணவு அமைச் சர் எ.வ.வேலுவை டெல்லிக்கு அனுப்பியும் கூடுதல் மண்ணெண் ணெயை பெற்றார். இதனால் ரேஷன் கடைகளில் தட்டுப் பாடின்றி மண்ணெண்ணெய் வழங்கப்பட்டது.
அமைச்சர் காமராஜ்: காங்கிரஸ் – திமுக கூட்டணி ஆட்சியில்தான் சிறப்பு பொதுவிநியோகத் திட்டத் துக்கான மானியம் நிறுத்தப்பட் டது. அந்த சுமையையும் ஏற்றுக் கொண்டு பொதுவிநியோகத் திட்டத்தை ஜெயலலிதா சிறப்பாக செயல்படுத்தினார். வரும் ஏப்ரல் 1-ம் தேதி ஸ்மார்ட் ரேஷன் அட்டை வழங்கும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைப்பார்.
மு.க.ஸ்டாலின்: ரேஷன் கடை களில் அத்தியாவசியப் பொருட் கள் வழங்கப்படாததைக் கண் டித்து பெண்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அமைச்சர் காமராஜ்: ரேஷன் கடைகள் முன்பு பெண்கள் போராட் டம் நடத்தவில்லை. திமுகவினர் தான் போராட்டம் நடத்தினர்.
மு.க.ஸ்டாலின்: ரேஷன் கடைகள் முன்பு பெண்கள் போராட்டம் நடத்தியதை நிரூபித் தால் அதனை ஏற்றுக்கொள்ள அமைச்சர் தயாரா?
அமைச்சர் காமராஜ்: தமிழகத்தில் நான்கரை கோடி பெண்கள் உள்ளனர். அவர்களின் எத்தனை பேர் போராடினார்கள் என சொல்ல முடியுமா?
மு.க.ஸ்டாலின்: உண்மை என்ன என்பதை மக்கள் அறிவார்கள்.
இவ்வாறு விவாதம் நடை பெற்றது.