நாட்டுக்காய் கதம்ப சாம்பார்
என்னென்ன தேவை?
காய்கறிகள் (கத்தரிக்காய், வாழைக்காய், அவரைக்காய், வெள்ளைப் பூசணி துண்டுகள், முருங்கைக்காய், உருளைக்கிழங்கு அனைத்தும் சேர்த்து ) – 2 பெரிய கப்,
தக்காளி – 2 (நறுக்கவும்),
புளிக்கரைசல் – 1/4 கப்,
வேகவைத்த துவரம்பருப்பு – 1 கப்,
மஞ்சள்தூள் – சிறிது,
சாம்பார் பொடி – 2 டேபிள்ஸ்பூன்,
சின்ன வெங்காயம் – 1 கப்,
கடுகு, எண்ணெய், உப்பு, கறிவேப்பிலை – தேவைக்கு,
காய்ந்தமிளகாய் – 2,
கட்டி பெருங்காயம் வறுத்து பொடித்தது – சிறிது,
வெந்தயம் – 1/4 டீஸ்பூன்.
எப்படிச் செய்வது?
துவரம்பருப்பை முக்கால் பதத்திற்கு ேவகவைத்து மசிக்கவும். காய்கறிகளை உப்பு சேர்த்து வேக வைத்து, இத்துடன் சின்ன வெங்காயம், தக்காளியை சிறிது வதக்கி சேர்க்கவும். பின்பு மஞ்சள்தூள், சாம்பார் பொடி, புளிக்கரைசல் சேர்த்து கொதிக்க விடவும். துவரம்பருப்பையும் சேர்த்து கொதிக்க விடவும். மற்றொரு கடாயில் எண்ணெயை காயவைத்து கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை, பெருங்காயம், காய்ந்தமிளகாய் சேர்த்து தாளித்து கொதிக்கும் சாம்பாரில் கொட்டி கலந்து இறக்கவும். பொங்கல் சாதத்துடன் படைத்து பரிமாறவும்.