ஐ.நா. அமைதிப்படை தலைவர் இந்தியாவின் பங்களிப்புக்கு பாராட்டு
ஐ.நா. அமைதிப் படையின் தலை வர் பதவியிலிருந்து ஓய்வுபெற உள்ள ஹெர்வ் லாட்சூஸ், இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளின் பங்களிப்பை வெகுவாக பாராட்டி உள்ளார்.
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த லாட்சூஸ் இந்த மாதத்துடன் ஓய்வு பெற உள்ளார். இதையடுத்து, அதே நாட்டைச் சேர்ந்த ஜீன்-பீர் லாக்ராய்க்ஸ் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலை யில், லாட்சூஸ் நியூயார்க்கில் செய்தியாளர்களிடம் கூறிய தாவது:
ஐ.நா. அமைதிப்படையில் இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளின் வீரர்கள் குறிப்பிடத் தக்க எண்ணிக்கையில் இடம் பெற்றுள்ளனர். குறிப்பாக அமைதிப்படையில் இடம்பெற் றுள்ள வீரர்களின் எண்ணிக்கை அடிப்படையில், முதல் 4 நாடு களில் தெற்காசிய நாடும் இடம் பெற்றிருக்கும்.
இதுதவிர, தெற்காசிய நாடு களைச் சேர்ந்த வீரர்கள் நன்கு பயிற்சி பெற்றிருப்பதுடன் திறமை யானவர்களாகவும், நற்குணம் கொண்டவர்களாகவும் உள்ளனர். என்னுடைய 6 ஆண்டு கால பதவிக் காலத்தில் தெற்காசிய வீரர்கள் ஆற்றிய பங்கு பாராட்டுக்குரியது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கடந்த பிப்ரவரி மாத நிலவரப் படி ஐ.நா. அமைதிப்படையில், 7,606 இந்திய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.