பச்சிளம் குழந்தை பராமரிப்பு
பச்சிளம் குழந்தையை எந்தெந்த சூழ்நிலையில் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கவேண்டும்?
காய்ச்சல், பால் சரியாக உறிஞ்சி குடிக்காமலிருத்தல், சோர்ந்து போகுதல், மூச்சுவிட கஷ்டப்படுதல்.
ஒரு நாளில் மூன்று முறைக்கு குறைவாக சிறுநீர் போகுதல், உதடுகள் உலர்ந்து போகுதல், உச்சிக்குழி மிகவும் தாழ்வாக இருத்தல், வலிப்பு ஏற்படுதல்.
பச்சிளம் குழந்தையை நோய் தொற்றியிருப்பினும், பல நேரங்களில் காய்ச்சல் இருப்பது இல்லை. குழந்தைக்கு பால் சரியான அளவு கிடைக்காத போது ஏற்படும் அறிகுறி: ஒரு நாளில் 6 முறைக்கு குறைவாக சிறுநீர் போகுதல்
குழந்தை பாலுக்காக அழுதல் (அப்பொழுது பால் கொடுத்தால் அழுகை நின்று விடும்). ஆனால் நோயுற்ற குழந்தைகள் பாலுறிஞ்சாமல் சோர்ந்து காணப்படும். குழந்தை எடை அதிகரிக்காமல் இருத்தல்
உதடு உலர்ந்து போகுதல்
பச்சிளம் குழந்தைக்கு மூக்குசளி ஏற்பட மிக பொதுவான காரணம்: மூக்கு சளி ஏற்பட பால் எறிக்களித்தலே மிகப்பொதுவான காரணம். குழந்தைக்கு பால் கொடுத்த பிறகு வயிறு அழுந்தாதபடி நேராக பிடித்து முதுகில் தட்டி கொடுத்து ஏப்பம் விட்ட பிறகு சலைன் கரைசலை மூக்கில் விடுவதன் மூலம் கட்டுபடுத்தலாம். சளிமருந்து கொடுப்பதால் குழந்தை அதிகமாக அழுதல், உடல் நடுக்கம் போன்றவை ஏற்பட வாய்ப்பு அதிகம்.
பச்சிளம் குழந்தைக்கு வயிற்று வலி ஏற்படகாரணம்:
வயிற்று வலி பொதுவாக 2-வது, 3-வது வாரத்தில் ஆரம்பமாகும். இது 3 வது அல்லது 4-வது மாதத்தில் போய்விடும். குழந்தைக்கு அதிகமாக வாயு போதல், நெழிந்து முறிந்து அழுதல், ஒழிக்கி ஒழிக்கி பேதி போகுதல் ஆகியவை வயிற்று வலியுடன் சேர்ந்து காணப்படும். இதற்கு சைமெத்திகோன் அடங்கிய சொட்டு மருந்து கொடுக்க வேண்டும். மற்ற மருந்துகளான டைசைக்குளோபின் போன்ற மருந்துகள் உபயோகிக்கும் போது மலசிக்கல் ஏற்படவாய்ப்பு உண்டு.