அமெரிக்கா செல்கிறார் சீன அதிபர் ஏப். 6,7 ல் டிரம்புடன் சந்திப்பு
அமெரிக்கா செல்லும் சீன அதிபர் ஸீ ஜிங்பிங், அதிபர் டொனால்ட் டிரம்ப்பை ஏப்.6,7 ம் தேதிகளில் சந்தித்து பேசுகிறார்.
அமெரிக்காவுக்கு ஆண்டுதோறும் 500 பில்லியன் டாலர்கள் அளவிற்கு வர்த்தகத்தில் ‘துண்டு’ விழுகிறது. எரிசக்தி இறக்குமதியில் ‘துண்டு’ விழுவதை ஏற்கலாம். ஆனால் பல விஷயங்களில் இவ்வாறு நடப்பதை ஏற்க முடியாது என கருதுகிறார் டிரம்ப். பல நாடுகள் (சீனா போல) குறைந்த விலையில் நுகர்வுப் பொருட்களை, அமெரிக்க சந்தையில் குவிப்பதால், வர்த்தகத்தில் ‘துண்டு’ விழுகிறது என டிரம்ப் நிர்வாகம் கருதுவது குறிப்பிடத்தக்கது.
இரு தலைவர்களும் புளோரிடா மாகாணத்திலுள்ள மாளிகை ஒன்றில் ஏப்.,6 மற்றும் 7ம் தேதிகளில் சந்தித்துப் பேசவுள்ளனர்.
இதுகுறித்து வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் சீன் ஸ்பைசர் கூறுகையில்,” அமெரிக்காவிற்கும், சீனாவிற்கும் இடையிலான வர்த்தக உறவில் எழுந்துள்ள சிக்கல்கள், வட கொரியாவின் அணு ஆயுத ஏவுகணை சோதனைகள் குறித்து பேசப் போகிறோம். இரு நாடுகளும் தங்களுக்கிடையிலான பிரச்னைகளை தீர்க்கவும் ஆலோசிக்க உள்ளன,” என்றார்.