வெடிகுண்டுடன் டில்லிக்கு வர முயன்ற வீரர் கைது
வெடிகுண்டுகளுடன் காஷ்மீரில் இருந்து டில்லிக்கு வர முயன்ற எல்லை பாதுகாப்பு படை வீரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குண்டுடன் வந்த வீரர் :
ஸ்ரீநகர் விமான நிலையத்திற்கு இளைஞர் ஒருவர் பையுடன் வந்துள்ளார். டில்லி விமானத்தில் ஏறுவதற்காக சென்ற அவரின் பையை விமான நிலைய அதிகாரிகள் சோதனையிட்டுள்ளனர். அதில் 2 கை எறி குண்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அந்த வீரர் கைது செய்யப்பட்டார்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் எல்லை பாதுகாப்பு படை வீரர் என்பதும், காஷ்மீரின் உரி பகுதியில் பாதுகாப்பு பணி செய்து வருபவர் என்பதும் தெரிய வந்துள்ளது. இவர் எதற்காக எறிகுண்டுகளுடன் டில்லி செல்ல முயன்றார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.