விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் இன்று பொது வேலைநிறுத்தம்
டில்லியில் போராட்டம் நடத்திவரும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக, இன்று(ஏப்., 3) தமிழகத்தில் பொது வேலைநிறுத்தம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தி.மு.க., உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.
இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டியக்கம் அறிவித்ததாவது: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று(ஏப்., 3) தமிழகத்தில் பொது வேலைநிறுத்தம் நடத்தப்பட உள்ளது. இதற்கு தி.மு.க., காங்., த.மா.க., இ.கம்யூ., உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
கோரிக்கைகள்:
* வேளாண் கடனை தள்ளுபடி செய்யவேண்டும்
* தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெற்ற அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.
* அண்டை மாநிலங்கள் புதிதாக அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும்.
* காவிரி மேலாண் வாரியம் அமைக்க வேண்டும்.
* வறட்சியால் பாதிக்கப்பட்ட ஏக்கருக்கு ரூ.25,000 நிவாரணம் வழங்க வேண்டும்.
* நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும்.
* பயிர்கள் கருகியதால், தற்கொலை செய்தும், அதிர்ச்சியிலும் இறந்த விவசாயிகள் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்