ஊக்க மருந்து உபயோகிக்கும் வீரர்கள்; இந்தியாவுக்கு 3வது இடம்
ஊக்க மருந்து உபயோகிக்கும் விளையாட்டு வீரர்கள் பட்டியலில் இந்தியா 3வது இடத்தை பிடித்துள்ளது.
ஊக்கமருந்து சோதனை:
விளையாட்டு நட்சத்திரங்களில் சிலர் ஊக்கமருந்து பயன்படுத்தி சிக்குவது தொடர்கிறது. கடந்த 2015ல் சர்வதேச ஊக்கமருந்து சோதனை மையம் (‘வாடா’) அனுமதி பெற்ற, மையங்களில் இருந்து பெறப்பட்ட தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் இந்தியா தொடர்ந்து மூன்றாவது முறையாக 3வது இடத்தை அடைந்துள்ளது. கடந்த 2013ம் ஆண்டும்(91 நபர்கள்), 2014ம் ஆண்டும் (96 நபர்கள்) இந்தியா 3வது இடம் பிடித்திருந்தது.
பளுதுாக்குதலில் அதிகம்:
இந்தியா சார்பில் மொத்தம் 117 நட்சத்திரங்கள் சோதனையில் சிக்கினர். இதில் 78 வீரர்கள், 37 வீராங்கனைகள் அடங்குவர். மீதமுள்ள 2 நபர்கள் ‘பாசிட்டிவ்’ என அறியப்படவில்லை. அதிகபட்சமாக பளுதுாக்குதல் பிரிவில் 56 பேர் சிக்கியுள்ளனர். தடகளத்தில் 21, மல்யுத்தம், குத்துச்சண்டையில் தலா 8 பேர் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர். கபடி (4), ஹாக்கி (1), கால்பந்து (1) நட்சத்திரங்களும் இடம்பெற்றுள்ளனர். பட்டியலில், முதலிரண்டு இடங்களில் ரஷ்யா (176), இத்தாலி (129) உள்ளன.