35 ஆண்டுக்குப் பிறகு பள்ளி நண்பரை குத்துச்சண்டைக்கு அழைத்த பிரதமர்!
கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும் , ஃபிரண்ட்ஸ் தொடரில் நடித்து புகழ்பெற்ற மாத்தியு பெர்ரியும் விரைவில் குத்துச் சண்டையிடுவார்கள் என எதிர்பார்க்கலாம் .
35 வருடங்களுக்கு முன் பள்ளியில் நடந்த சண்டையை சரி கட்டும் விதமாக, பெர்ரியை குத்துச் சண்டை போட்டிக்கு அழைத்துள்ளார் கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ.
தானும் ஜஸ்டின் ட்ரூடோவும் ஒரே பள்ளியில் படித்த போது தன்னை விட வயதில் சிறியவரான ஜஸ்டினை பொறாமை காரணமாக தானும் தனது நண்பர் ஒருவரும் அடித்ததாக “அமெரிக்கன் டாக் ஷோ” என்ற நேர்காணல் நிகழ்ச்சியில் தெரிவித்தார் நடிகர் மாத்யூ பெர்ரி.
இந்த சம்பவம் சுமார் 35 வருடங்களுக்கு முன்னர் நடந்துள்ளது.
பெர்ரியின் அந்த நேர்காணலுக்கு பிறகு அதனை சரி செய்ய மீண்டும் குத்துச் சண்டை போட்டிக்கு அவரை அழைத்துள்ளார் ட்ரூடோ.
இதனை தனது டிவிட்டர் பக்கத்தில் ஏப்ரல் ஒன்றாம் தேதியன்று ஜஸ்டின் ட்ரூடோ வேடிக்கையாக தெரிவித்துள்ளார்;
ஊர் மட்டுமா, நாடே மாறிப் போச்சு இந்த மாணவருக்கு!
Lஆர்டிக் கடலுக்கடியில் கேட்கும் மர்ம ஓசைக்கு என்ன காரணம்? கனடா ஆய்வு
இடைபட்ட காலங்களில் ஃபிரண்ட்ஸ் தொடரின் மூலம் புகழ்பெற்ற நடிகராக மாத்யு பெர்ரி மாறினார்.
ஜஸ்டின் ட்ரூடோ, தனது தந்தையை அரசியலில் தொடர்ந்து, கனடாவின் பிரதமராக பதவியேற்றார்; மேலும் குத்துச்சண்டையை தனது பொழுது போக்குகளில் ஒன்றாகவும் வைத்துள்ளார் அவர்.
இருப்பினும் ஜஸ்டினின் இந்த டிவீட்டுக்கு பெர்ரியும் பதில் டிவீட் செய்துள்ளார்; ஜஸ்டினின் கட்டுபாட்டில் ராணுவம் இருப்பதை தான் நினைவில் கொண்டு இதற்கு சம்மதிப்பதாக பெர்ரி நகைச்சுவையாக மறு டீவிட் செய்துள்ளார்.