பாபர் மசூதி இடிப்பு வழக்கை 2 ஆண்டுகளில் முடிக்க வேண்டும்: உச்ச நீதிமன்றம்
பாபர் மசூதி இடிப்பு வழக்கு விசாரணையை தினமும் நடத்தி 2 ஆண்டுகளில் முடிக்க வேண்டுமென உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் மூத்த பாஜக தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி மற்றும் 6 பேருக்கு எதிரான வழக்கை தினமும் விசாரித்து 2 ஆண்டுகளில் முடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மேலும் வழக்கை ரே பரேலியிலிருந்து லக்னோவுக்கு மாற்றுவது குறித்தும் உச்ச நீதிமன்றம் சூசகமாக தெரிவித்துள்ளது. விசாரணைகள் நிலுவையில் இருப்பது ‘நீதியை ஏமாற்றும் செயல்’ என்று கண்டித்தது உச்ச நீதிமன்றம்.
அத்வானி, ஜோஷி ஆகியோர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வேணுகோபால் கூறும்போது, “இதில் என்ன சதி இருக்கிறது? கரசேவகர்களுடன் சேர்ந்து சதி செய்தோமா? இதனை விசாரிக்க புதிய விசாரணை அமைக்க வேண்டும்” என்று அவர்கள் சார்பாக கூறினார்.