ஊழலில் இந்தியா எத்தனாவது இடம் தெரியுமா?
EMEIA நடத்திய ஆய்வில் இந்தியா லஞ்சம் மற்றும் ஊழலில் 9வது இடத்தை பிடித்துள்ளது. ஆய்வில் 78 சதவீத மக்கள் இந்தியா தொழில் துறையில் லஞ்சம் மற்றும் ஊழல் நடைபெறுவதாக கூறியுள்ளனர். உக்ரைன், கென்யா, தென் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஊழலில் இந்தியாவையே பின்னுக்கு தள்ளிவிட்டது குறிப்பிடத்தக்கது. ஐரோப்பா, இந்தியா, ஆப்ரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் நடக்கும் முறைகேடுகள் குறித்த ஆய்வை மேற்கொண்ட EMEIA , ஊழல் மற்றும் லஞ்சத்தில் ஈடுபடும் நாடுகளின் தரவரிசையை வெளியிட்டது. இதில் இந்தியா 9வது இடத்தை பிடித்துள்ளது. 78 சதவீத இந்தியர்கள் இந்தியாவில் அதிகளவிலான லஞ்சம் மற்றும் ஊழல் நடைபெறுவதாக கூறியுள்ளதாக EMEIA கூறியுள்ளது. உக்ரைன் நாடு முதலிடத்தில் உள்ளது. சைப்ரஸ் மற்றும் கிரேக்கம் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களில் உள்ளன.
வளரும் நாடாக கருதப்படும் தென் அமெரிக்கா இந்தியாவை பின்னுக்கு தள்ளி இருக்கின்றது. ஊழல் மற்றும் லஞ்சத்தில் ஏழாவது இடத்தை பிடித்துள்ளது தென் ஆப்ரிக்கா. 2015 -ம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் இந்தியா ஆறாவது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.