பருப்பு இட்லி
என்னென்ன தேவை?
இட்லி அரிசி – 1 1/2 கப்,
துவரம்பருப்பு – 3 டீஸ்பூன்,
கிள்ளிய காய்ந்தமிளகாய் – 5,
மஞ்சள்தூள் – 1/4 டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கு.
தாளிக்க…
கடுகு – 1 டீஸ்பூன்,
கடலைப்பருப்பு – 2 டீஸ்பூன்,
கறிவேப்பிலை – 1 கொத்து,
எண்ணெய் – தேவைக்கு.
எப்படிச் செய்வது?
இட்லி அரிசியை 4 மணி நேரம் ஊற வைத்து, உப்பு போட்டு நைசாக அரைக்கவும். இட்லி தட்டில் எண்ணெய் தேய்த்து மாவை ஊற்றி, ஆவியில் வேகவைத்து எடுத்து, சதுர துண்டுகளாக வெட்டவும். துவரம்பருப்பை, மஞ்சள் தூள் சேர்த்து 3 விசில் வரும்வரை வேக வைக்கவும். கடாயில் எண்ணெயை காயவைத்து கடுகு, கடலைப்பருப்பு, காய்ந்தமிளகாய், கறிவேப்பிலை தாளித்து, வேகவைத்த துவரம்பருப்பு, 1/4 கப் தண்ணீர், உப்பு சேர்த்து கொதிக்க விடவும். சிறிது கெட்டியானதும் இட்லி துண்டுகளை சேர்த்து, தண்ணீர் வற்றும் வரை கிளறி இறக்கி பரிமாறவும்.