உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி 3 மதுக் கடைகள் அகற்றம்: சாமளாபுரம் கிராம மக்கள் மகிழ்ச்சி
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி நெடுஞ்சாலைகளில் இருந்த 3 டாஸ்மாக் கடைகள் அகற்றப் பட்டதைத் தொடர்ந்து, டாஸ்மாக் மதுபானக் கடை இல்லாத கிராம மாக சாமளாபுரம் திகழ்கிறது என கிராம மக்கள் பெருமைப் படுகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் சாமளா புரத்தில் டாஸ்மாக் கடைக்கு எதிரான போராட்டத்தில், பெண் ணைத் தாக்கிய ஏடிஎஸ்பி பாண்டி யராஜனை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து குரல் எழுப்புகின்றனர்.
உண்ணாவிரதப் போராட்டத் தில் ஈடுபட்ட 27 பேரை 12-ம் தேதி அதிகாலை போலீஸார் கைது செய்தனர். அவர்களில் 7 பேர் மீது மட்டும், பொதுச் சொத்துக்கு சேதம் ஏற்படுத்துதல், ஆபாச வார்த்தையில் திட்டுதல், சட்ட விரோதமாகக் கூடுதல் மற்றும் போராட்டத்துக்கு தூண்டுதல் உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் மங்கலம் போலீஸார் வழக்கு பதிந்தனர். கைது செய்யப்பட்ட 27 பேரும் நேற்று முன்தினம் மாலை விடுவிக்கப்பட்டனர். அப் போது, படிப்படியாக வழக்குகள் திரும்பப் பெறப்படும் என மற் றொரு ஏடிஎஸ்பி ஸ்டாலின், பொது மக்களிடம் உறுதியளித்தார்.
பொதுமக்கள் ஆதரவு
இச்சம்பவத்தில் ஏடிஎஸ்பியால் தாக்கப்பட்ட அய்யம்பாளையம் ஈஸ்வரி, காது பிரச்சினைக்கு தொடர்ந்து சிகிச்சை எடுத்து வருகிறார். தடியடியில் காயம் அடைந்த சிவகணேஷ் கோவை தனியார் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சையில் உள்ளார்.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட ஈஸ்வரி உள்ளிட்டவர்களையும், போராட்டக்காரர்களையும் காங் கிரஸ் கட்சியைச் சேர்ந்த தாராபு ரம் சட்டப்பேரவை உறுப்பினர் காளிமுத்து நேற்று சந்தித்து, சம்பவம் குறித்து விசாரித்தார். அதேபோல், பல்வேறு அமைப்பி னரும் கிராம மக்களை சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
அப்பகுதி கிராம மக்கள் கூறிய தாவது: பாதிக்கப்பட்ட மக்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு, காவல் அதிகாரி மற்றும் காவலர் களை பதவி நீக்கம் செய்ய வேண் டும். டாஸ்மாக் மதுபானக் கடை இல்லாத கிராமமாக எங்கள் ஊர் இருப்பது எங்களுக்கு பெருமை என்றனர்.
திருப்பூர் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் ராஜன் கூறியதாவது:
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி நெடுஞ்சாலையில் இருந்த 3 கடை களும் அகற்றப்பட்டன. பொது மக்கள் போராட்டம் காரண மாக சாமளாபுரத்தில் அமைய இருந்த மதுபானக் கடை ஆட்சியர் உத்தரவுப்படி மூடப்பட்டது. அதே போல், மற்றொரு மதுபானக் கடை அமைப்பதற்கான பணிகளும் பொதுமக்கள் எதிர்ப்பு காரணமாக முழுமையாகக் கைவிடப்பட்டன. தற்போது சாமளாபுரம் கிராமத் தில், டாஸ்மாக் மதுபானக் கடையே இல்லை என்றார்.