பெர்லின் கிறிஸ்துமஸ் சந்தையில் தீவிரவாத தாக்குதல்.. பொறுப்பேற்றது ஐ.எஸ்.ஐ.எஸ்., அமைப்பு !
ஜெர்மனியின் பெர்லின் நகரில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக போடப்பட்டிருந்த சந்தையில் நடந்த தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ்., அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டது.
ஜெர்மனியின் பெர்லின் நகரில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக மார்க்கெட் போடப்பட்டிருந்தது. கைசெர் சர்ச் அருகே உள்ள கடைகளில் மக்கள் கூட்டம் கூட்டமாக பொருட்களை வாங்கிக் கொண்டிருந்தனர்.
அப்போது அப்பகுதியில் 60 கி.மீ., வேகத்தில் வந்த லாரி, கூட்டத்தில் புகுந்தது. இதில் 12 பேர் பலியாகினர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். இதில் சந்தேகத்தின் பேரில், போலீசார் பாகிஸ்தானை சேர்ந்த ஒருவரை கைது செய்தனர்.
இவருக்கு எதிராக போதிய ஆதாரம் இல்லாத காரணத்தினால் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இந்த தாக்குதலுக்கு அமெரிக்க சார்பில் கண்டனம் தெரிவித்துள்ள அதிபர் டிரம்ப், இந்த தாக்குதலுக்கு இஸ்லாமிய தீவிரவாதிகள் தான் காரணம் என்றும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இத் தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ்., அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது.