புத்தாண்டு புது விருந்து: அடை பாயசம்
என்னென்ன தேவை?
அரிசி அடை – 100 கிராம்
(கடைகளில் கிடைக்கும்)
வெல்லம் – 150 கிராம்
தேங்காய் – அரை மூடி ( துருவியது )
தேங்காய் – 2 டீஸ்பூன்
( சிறு கீற்றுகளாக அரிந்துகொள்ளுங்கள்)
நெய் – 2 டீஸ்பூன்
ஏலக்காய்ப் பொடி – அரை டீஸ்பூன்
முந்திரி, திராட்சை – சிறிதளவு
எப்படிச் செய்வது?
அடையைத் தண்ணீரில் அலசிப் பத்து நிமிடங்கள் ஊறவையுங்கள். துருவிய தேங்காயைத் தண்ணீர் ஊற்றி அரைத்து முதல், இரண்டாம் பாலை எடுத்துக்கொள்ளுங்கள். அடி கனமான பாத்திரத்தில் அடையுடன் தேவையான நீர் சேர்த்து வேகவிடுங்கள். பாதி வெந்ததும் பொடித்த வெல்லத்தைச் சேருங்கள். வெல்லத்துடன் அடை நன்கு கலந்து மெத்தென்று வந்ததும் இரண்டாவதாக எடுத்த தேங்காய்ப் பால் சேருங்கள். சிறிது கொதித்ததும் முதல் பால் சேர்த்து ஏலக்காய்ப் பொடி தூவி இறக்கிவையுங்கள். நெய்யில் முந்திரி, திராட்சை, தேங்காய் துண்டுகள் ஆகியவற்றைச் சேர்த்துப் பொன்னிறமாக வதக்கி, பாயசத்தில் சேருங்கள்.
விரும்பினால் பொடியாக அரிந்த நேந்திரம் பழத்துண்டுகள் அல்லது பலாச்சுளைகளை நெய்யில் வதக்கிச் சேர்க்கலாம். சுவை கூடும்.