பெங்களூருவில் பிரபல ரவுடியின் வீட்டில் சோதனை: சிக்கியது ரூ.40 கோடி
பிரபல ரவுடியின் வீட்டில் நடத்திய சோதனையில் ரூ.40 கோடி பழைய நோட்டுக்கள் சிக்கின.
கடந்த ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி ரூபாய் நோட்டுக்களில் மத்திய அரசு மாற்றம் கொண்டு வந்தது. இதையடுத்து நாடு முழுவதும் தீவிர சோதனை நடத்தப்பட்டது. அதில் கோடிக்கணக்கான ரூபாய் நோட்டுக்கள் சிக்கின. அவர்கள் மீது வழக்கு தொடர்ந்து, தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சூழலில் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பிரபல ரவுடி வி.நாகராஜ் விட்டில் காவல்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அவர் பல்வேறு அரசியல் கொலை, ஆள் கடத்தல் சம்பவங்களுக்கு பெயர் பெற்றவர். இந்நிலையில் நாகராஜ் மீது தொடரப்பட்ட கடத்தல் வழக்கு ஒன்றில், அவர் வீட்டில் சோதனையிடுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. பூட்டப்பட்டிருந்த வீட்டு கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு ரூ.40 கோடி மதிப்பிலான பழைய செல்லாத ரூபாய் நோட்டுக்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனைக் கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில் தப்பியோடிய பாம் நாகாவை தீவிரமாக தேடி வருகின்றனர்.