வஞ்சிரம் மீன் குழம்பு
என்னென்ன தேவை?
எண்ணெய் – 3 தேக்கரண்டி
கடுகு – 1 தேக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
சின்ன வெங்காயம் – 10
பச்சை மிளகாய் – 2
கறிவேப்பிலை – சிறிது
புளி – ஒரு சிறிய எலுமிச்சை அளவு
மாங்காய் – 1
கத்தரிக்காய் – 1
முருங்கைக்காய் – 1
வஞ்சரம் மீன் – 500 கிராம்
உப்பு – சிறிது
அரைக்க…
எண்ணெய் – 1 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் – 8 முதல் 10
கொத்தமல்லி – 2 தேக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
துருவிய தேங்காய் – 1 கப்
எப்படிச் செய்வது?
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்த மிளகாய், கொத்தமல்லி, சீரகம், தேங்காய் சேர்த்து 2 நிமிடங்கள் வறுத்து மிக்சி ஜாரில் போட்டு நன்கு மசித்து வைக்கவும். ஒரு பாத்திரத்தில் புளியை ஊற வைக்கவும். கடாயில் இன்னும் சிறிது எண்ணெய் விட்டு கடுகு மற்றும் சீரகம் சேர்த்து பின் சின்ன வெங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய், உப்பு போட்டு 1 நிமிடம் வதக்கி மாங்காய், கத்தரிக்காய் மற்றும் முருங்கைக்காய் சேர்த்து தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். இப்போது மசாலா கலவையை ஊற்றி நன்கு கலந்து கொதிக்க விட்டு பின் மீன் துண்டுகளை சேர்த்து புளி கரைசலை ஊற்றி வேக விடவும். சுவையான வஞ்சிரம் மீன் குழம்பு தயார்.