டெல்லியில் தமிழக விவசாயிகள் வளையல் உடைத்து போராட்டம்
விவசாயிகளின் கடன்களை தள்ளு படி செய்ய வேண்டும். நதிகளை இணைக்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் டெல்லி யில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஒன்றரை மாதங்களாக நாள் தோறும் வித்தியாசமான போராட் டங்களை விவசாயிகள் நடத்தி வரு கின்றனர். எலிக்கறி, பாம்புக் கறி தின்றது, பாதி தலை மொட்டையடித் தது, சேலை அணிந்து ஊர்வலம் என இதுவரை பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.
அந்த வரிசையில் நேற்று பெண்கள் வேடமணிந்த விவசாயி கள் வளையல்களை உடைத்தும் நெற்றியில் அணிந்த குங்குமத்தை அழித்தும் கவன ஈர்ப்பு ஆர்ப் பாட்டம் நடத்தினர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியபோது, தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் மனைவியர் நிலையை சித்தரிக்கும் வகையில் வளையல்களை உடைத்து போராட்டத்தை நடத்தியுள்ளோம். பிரதமர் நரேந்திர மோடி எங்களை அழைத்து விவசாயிகளின் பிரச்சினைகளைக் கேட்டறிய வேண்டும். அவர் அழைக்கும் வரை எங்களின் போராட்டம் தொடரும் என்று தெரிவித்தனர்.