உயர் நீதிமன்றங்களில் 51 நீதிபதிகளை நியமிக்க கொலிஜியம் பரிந்துரை
நாடு முழுவதும் பல்வேறு உயர் நீதிமன்றங்களில் 51 நீதிபதிகளை நியமிக்க மத்திய அரசுக்கு கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது.
மும்பை, பஞ்சாப்-ஹரி யாணா, பாட்னா, ஹைதராபாத், டெல்லி, சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், ஜம்மு-காஷ்மீர் உள்ளிட்ட 10 உயர் நீதிமன்றங்களில் புதிய நீதிபதிகளை நியமிக்க 90 நீதிபதிகளின் பெயர்கள் பரிசீலனை செய்யப்பட்டன.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ். கேஹர் தலைமையிலான கொலிஜியம் ஆய்வு செய்து 51 பேரை தேர்வு செய்துள்ளது. இந்தப் பட்டியல் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
மத்திய அரசு விரைவில் ஒப்புதல் அளித்து புதிய நீதிபதிகள் பதவியேற்பார்கள் என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.