வட மாநிலங்களிலும் கொளுத்தும் வெயில்: ராஜஸ்தானில் 114 பாரன்ஹீட் வெப்பம்!
வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, வேலூர், சேலம், ஈரோடு,கரூர் உள்ளிட்ட பகுதிகளில் 100 110 பாரன்ஹீட்க்கும் அதிகமான வெயில் கொளுத்திவருகிறது.

ஆனால், வட மாநிலங்களுடன் ஒப்பிடும்போது இங்கு நிலைமை சற்று ஆறுதல் அளிக்கிறது. ஆந்திரா, தெலங்கானா, குஜராத், மஹாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் 110 பாரன்ஹீட் வரை வெயில் ருத்ர தாண்டவம் ஆடி வருகிறது. குறிப்பாக, தலைநகர் டெல்லியில் 107 பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.
இதனால், அந்த மாநிலங்களில் வெப்ப அலை வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. குறிப்பாக, ராஜஸ்தானில் நேற்று 114 பாரன்ஹீட் வெயில் கொளுத்தியது. தமிழகத்தில் அதிகபட்சமாக வேலூரில் 109 டிகிரியும், சென்னையில் 102 110 பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் மதுரை, திருச்சி, சேலம், கரூர், தருமபுரி, கடலூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 100 பாரன்ஹீட் அதிகமான வெப்பம் பதிவாகியுள்ளன.