ரயில் டிக்கெட் இனி 37 நொடிகளில் பெற முடியும்: ஐஆர்சிடிசி அறிவிப்பு
செல்போன் மூலம் ரயில் டிக்கெட் பெறும் செயலி மேம்படுத்தப்பட் டுள்ளதால், இனி 37 நொடிகளில் டிக்கெட் பெற முடியும் என இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (ஐஆர்சிடிசி) தெரி வித்துள்ளது.
இது தொடர்பாக ஐஆர்சிடிசி அதிகாரிகள் கூறுகையில், ‘‘இன்டர் நெட் வசதியுள்ள செல்போன் பயன் பாடு மக்களிடம் அதிகரித்துள்ளது. எனவே, மக்கள் வசதிக்காக ரயில் டிக்கெட் செல்போன் மூலம் முன் பதிவு செய்யும் வகையில் ரயில் கனெக்ட் என்ற செயலி கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது, இந்த செயலி மேம்படுத்தப்பட்டுள்ளது. இதனால், 37 நொடிகளில் ஒரு டிக் கெட் எடுக்க முடியும். எப்போது வேண்டுமென்றாலும் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம். ஆனால், தத்கால் டிக்கெட் பெற பயணத்துக்கு முந்தைய நாளில் ஏசி டிக்கெட்களுக்கு காலை 10 மணிக்கும், ஏசி அல்லாத டிக்கெட்களுக்கு காலை 11 மணிக்கும் முன்பதிவு செய்ய முடியும்.’’ என்றனர்.