தினகரனுக்கு 9 எம்.எல்.ஏ.,க்கள் மட்டுமே ஆதரவு
அ.தி.மு.க., வின் இரு அணிகளையும் இணைப்பதற்கான பேச்சுவார்த்தை துவங்கி நடைபெற்று வருகிறது. ஒட்டுமொத்த அமைச்சரவையும் தினகரன் குடும்பத்தை ஒதுக்கி விட முடிவு செய்து விட்டது.
9 பேர் மட்டுமே..
இந்நிலையில், கட்சியின் அதிகார மையம் என கருதப்படும் தினகரன் பக்கம் எத்தனை எம்.எல்.ஏ.,க்கள் செல்ல உள்ளனர் என்பது முழுமையாக தெரியவில்லை. இதுவரை சுப்பிரமணி (சாத்துார்), வெற்றிவேல் (பெரம்பூர்), தங்கதமிழ்ச்செல்வன் (ஆண்டிபட்டி), கதிர்காமு (பெரியகுளம்), ஜக்கையன் (கம்பம்), செல்வமோகன் தாஸ்(தென்காசி), ஏழுமலை(பூந்தமல்லி), சின்னத்தம்பி(ஆத்தூர்) மற்றும் கருணாஸ்(திருவாடனை) ஆகிய 9 பேர் மட்டுமே தினகரனுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் டில்லி பிரதிநிதி தளவாய் சுந்தரமும் தினகரனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
இவர்கள் தவிர உடுமலை ராதாகிருஷ்ணன் (உடுமலை), செங்கோட்டையன் (கோபி), பொள்ளாச்சி ஜெயராமன் (பொள்ளாச்சி), சாந்திராமன் (குன்னூர்), கனகராஜ் (சூலூர்) பழனியப்பன் (பாப்பிரெட்டிபட்டி) இவர்களும் டி.டி.வி., தினகரனுக்கு இன்று ஆதரவு தெரவிக்கலாம் என தெரிகிறது.
தினகரனே காரணம்:
அமைச்சர்களின் ஆலோசனைக்குப் பின், அமைச்சர் சண்முகம் கூறும்போது, ‛கட்சியில் கெட்டபெயருக்கு தினகரன் குடும்பமே காரணம். தினகரன் குடும்பத்தினருடன் தொடர்பை முழுமையாக துண்டிக்க வேண்டும்’ என்றார்.
ஓபிஎஸ் உடன் பேச்சு எப்போது?
சசிகலா குடும்பத்தின் ஆதிக்கம் அகற்றப்பட வேண்டும் என்று கூறினார் ஓ.பி.எஸ்., அவருடன் எடப்பாடி பழனிசாமி தரப்பு இன்னும் பேச்சுவார்த்தையை ஆரம்பிக்கவில்லை. எப்போது ஆரம்பிப்பார்கள் என்ற தகவலும் இல்லை.