சென்னையில் 26-ம் தேதி ஆசிய ஸ்குவாஷ் போட்டி: பாகிஸ்தான் வீரர்கள் பங்கேற்பு
19-வது ஆசிய தனிநபர் சாம்பியன் ஷிப் ஸ்குவாஷ் போட்டிகள் சென்னையில் வரும் 26-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை நடைபெறுகிறது. சென்னையில் கடைசியாக இந்த தொடர் கடந்த 2010-ம் ஆண்டு நடைபெற்றது. இதன் பின்னர் 7 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது நடைபெறுகிறது. இந்த தொடரில் பாகிஸ்தானில் இருந்து ஆடவர் பிரிவில் 4 வீரர்கள் கலந்து கொள்கின்றனர்.
ஆடவர் பிரிவில் ஹாங்காங்கை சேர்ந்த மேக்ஸ் லீக்கு தரவரிசை யில் முதல் நிலை அந்தஸ்தும், இந்தியாவின் சவுரவ் கோஷ லுக்கு 2-ம் நிலையும் வழங்கப் பட்டுள்ளது. இதனால் இவர்கள் இருவரும் இறுதிப் போட்டிக்கு முன்னதாக நேருக்கு நேர் மோத வாய்ப்பில்லை என கருதப்படுகிறது.
மலேசியாவை சேர்ந்த முகமது நபிஸ்வான், பாகிஸ்தானின் பர்கான் மெகபூப் உள்ளிட்ட வீரர் களும் சவால் கொடுக்க தயாராக உள்ளனர். இந்த தொடரில் சென்னையை சேர்ந்த இளம் வீரரரான வேலவன் செந்தில் குமார் மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது.
அவர் இந்த ஆண்டு தொடக் கத்தில் பிரிட்டிஷ் ஜூனியர் ஓபனில் பட்டம் வென்றிருந்தார். மேலும் கடந்த வாரம் தென் ஆப்பிரிக் காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் நடைபெற்ற பிஎஸ்ஏ டூர் போட்டி யில் 2-வது இடம் பிடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மகளிர் பிரிவில் இந்திய வீராங்கனைகளான ஜோஷ்னா சின்னப்பா, தீபிகா பல்லிகல் கலந்து கொள்கின்றனர். இதில் ஜோஷ்னா சமீபத்தில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப்பில் கால் இறுதி வரை முன்னேறியிருந்தார். உலக தரவரிசையில் 14-வது இடத்தில் உள்ள அவர் இந்த தொடரை நம்பிக்கையுடன் எதிர்கொள்கிறார்.
ஜோஸ்னாவுக்கு இந்த தொடரில் ஹாங்காங்கை சேர்ந்த அனி சவாலாக இருப்பார் என கருதப்படுகிறது. உலகத் தரவரி சையில் 12-வது இடத்தில் உள்ள அவருக்கு இந்த தொடரில் முதல் நிலை அந்தஸ்து வழங்கப்பட்டுள் ளது. சொந்த மண்ணில் விளை யாடுவதால் தீபிகா பல்லிகலும் அசத்த தயாராக உள்ளார்.