மக்கள் நலக்கூட்டணியில் இருந்து வெளியேறியது ஏன்? – திருப்பரங்குன்றம் தேர்தல் பிரச்சாரத்தில் விஜயகாந்த் புதிய தகவல்
மக்கள் விரும்பாததால் மக்கள் நலக்கூட்டணியில் இருந்து வெளி யேறினேன் என அவனியாபுரத்தில் நேற்று நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பேசினார்.
திருப்பரங்குன்றம் தேமுதிக வேட்பாளர் தனபாண்டியனை ஆதரித்து அக்கட்சி பொதுக்கூட்டம் அவனியாபுரத்தில் நேற்று நடை பெற்றது. இதில் விஜயகாந்த் பேசியதாவது:
திருப்பரங்குன்றத்தில் தேமுதிக வெற்றி பெற்றால் ஜல்லிக்கட்டு கொண்டுவர போராடுவேன். டெல்லி வரை கூட சென்று போராடு வேன். திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின், ஜல்லிக்கட்டு கொண்டு வருவேன் என்கிறார். அவரும், அவரது தந்தையும்தானே ஜல்லிக் கட்டு தடை செய்வதற்கு கையெ ழுத்து போட்டனர். அப்போது ஸ்டாலின் துணை முதல்வராக இருந்தார். அவரது அப்பா முதல் வராக இருந்தார். அதையெல்லாம் மறந்துவிட்டு இரண்டு பேரும் ஜல்லிக்கட்டு கொண்டு வருவோம் என நாடகமாடுகின்றனர். திமுக, அதிமுக கட்சியில் ஆட்கள் இல்லா மல், எங்கள் கட்சியில் இருந்து ஆட்களை இழுக்கிறார்கள். திமுக, அதிமுக இரண்டு கட்சிகளும் நாட்டை குட்டிச்சுவராக்கி விட்டனர். அதனால், அந்த இரண்டு கட்சி களுடன் கூட்டணி வைக்காமல், கடந்த தேர்தலில் மக்கள் நலக் கூட்டணிக்கு சென்றேன். மக்கள் ஆதரிக்காததால் தேர்தல் முடிந்த தும் மக்கள் நலக் கூட்டணியை விட்டு வெளியேறினேன். அந்த கூட்டணியில் தொகுதி உடன் படிக்கை மட்டுமே செய்து கொண் டோம். அதனால், நாங்கள் சந்தோஷ மாக பிரிந்துவிட்டோம். நானும் அவர்களை தாக்கி பேசுவதில்லை. அவர்களும் என்னை தாக்கி பேசு வதில்லை. இடைத்தேர்தலில் பெரிய பெரிய கட்சிகள் நின்றார் கள். அதனால், நானும் நிற்கிறேன். எத்தனை தோல்விகள் வந்தாலும் அரசியலில் இருந்து ஓட மாட்டேன். அதுபோலத்தான் என் கட்சியின ரும். என் கூடவே இருப்பார்கள். திமுக, அதிமுகவினருக்கு நாட்டு மக்கள் மீது அக்கறையில்லை. அக்கறை இருக்கிற மாதிரி நாடக மாடுகிறார்கள். எங்கு பார்த்தா லும் ஸ்டிரைக், குடத்தை தூக்கிக் கொண்டு மக்கள் தண்ணீருக் காக அலைகின்றனர். திருப்பரங் குன்றத்தில் 50 ஆயிரம் பேருக்கு குடிதண்ணீர் இல்லை. அவர் களுக்கு குடிநீர் வசதி செய்து கொடுக்கவில்லை. ஆனால், தண்ணீர் கொண்டு வருவோம் என்கிறார்கள். ஆனால், தண்ணீர் வந்தபாடில்லை என்று பேசினார்.
கூட்டத் துளிகள்..
கடந்த சட்டமன்ற தேர்தல் தோல்விக்குப் பின் விஜயகாந்த் வெளியே வராமல் இருந்தார். அவர் எந்த ஒரு பேட்டி யும் கொடுக்கவில்லை. பொதுக் கூட்டத்திலும், பொது நிகழ்ச்சிகளி லும் பங்கேற்காமல் தவிர்த்து வந் தார். நேற்றுதான் முதல் முறை யாக திருப்பரங்குன்றம் தேர்தல் பிரச்சாரத்துக்கு வந்தார். அதனால், அவரைப் பார்க்க தென் மாவட்டங் கள் முழுவதிலும் இருந்து அக் கட்சித் தொண்டர்கள் திரண்டிருந்த னர்.
விஜயகாந்த் மைக் பிடித்து பேச ஆரம்பித்ததும், என்னால் எல்லாருடைய பெயர்களையும் சொல்ல முடியாது, இப்படிச் சொன்னால் உளறுகிறேன் என் பார்கள். அதைப் பற்றி நான் கவலைப்படவில்லை, என்றார்.
கண்களில் இருந்து அடிக்கடி பொங்கி வந்த கண்ணீரை விஜய காந்த் கைக்குட்டையை எடுத்து துடைத்துக் கொண்டே இருந்தார்.
மேடையில் இருந்த விஜய காந்த்தை பார்த்த தொண்டர்கள் உற்சாக மிகுதியில் விசில் அடித் தும், கையை அசைத்தும் கூச்ச லிட்டுக் கொண்டே இருந்தனர். இதைப்பார்த்து உணர்ச்சி வசப்பட்டு கோபப்படும் விஜயகாந்த், நேற்று ஆரம்பத்தில் கண்டும், காணாமல் இருந்தார். ஆனால், தொண்டர்கள் விசில் அடித்ததால் ஒரு கட்டத்தில் பொறு மையிழந்த விஜயகாந்த் சைகை காட்டி கோபப்பட்டார். 20 நிமிடங் களுக்கு அவர் பேசினார்.