நெரிசல் பகுதியில் அவசர சிகிச்சைக்கு டெல்லியில் டாக்டர்கள் பைக்கில் சென்று சிகிச்சை
டெல்லியில் காலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் கடுமையாக இருக்கும். பலரும் அலுவலகம், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் நேரத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் கடும் அவஸ்தைக்குள்ளாகின்றனர். இதுபோன்ற சமயங்களில் ஆம்புலன்ஸ்கள் கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டு நோயாளியின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழல் உருவாகிறது. இதனை சமாளிக்க டெல்லியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனை ஒன்று, அவசர சிகிச்சை அளித்து நோயாளிக்கு உதவும் வகையில் தெற்கு டெல்லிக்கு உட்பட்ட பகுதிகளில் பைக் மருத்துவர்களை அனுப்பி சிகிச்சை அளிக்கும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
நெஞ்சுவலி, பக்கவாதம், சாலை விபத்துக்கு உள்ளிட்ட நோயாளிகளுக்கு முதலுதவி அளிக்கும் வகையில் இத்திட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி தகவல் தெரிவிக்கப்பட்டதும், பைக் மருத்துவர்கள் சம்பந்தப்பட்ட இடத்திற்கே விரைந்து சென்று நோயாளிகளுக்கு சிகிச்சையை அளிப்பர். அதனை தொடர்ந்து வரும் ஆம்புலன்ஸ் மூலம் நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்தும் செல்லும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.