வடசென்னை அனல் மின் நிலையத்தில் மின்உற்பத்தி முழுவதும் நிறுத்தம்
வடசென்னை அனல் மின் நிலையத்தில் தொழில்நுட்ப பாதிப்பு காரணமாக மொத்த மின் உற்பத்தியும் நிறுத்தப்பட்டுள்ளது.
பாதிப்பு:
சென்னையின் பல பகுதிகளில் நேற்றிரவு மின்வெட்டால் பாதிக்கப்பட்டதாக புகார் எழுந்த நிலையில், வடசென்னை அனல் மின் நிலையத்தில் தொழில்நுட்ப பாதிப்பு காரணமாக, மொத்தமாக 1,830 மெகாவாட் மின்உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக 2ம் அலகில் 1,200 மெகாவாட் மின்உறபத்தி பாதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் முதல் நிலையில் ஏற்பட்ட தொழில்நுட்ப பாதிப்பு காரணமாக 630 மெகாவாட் மின் உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது.
அபாயம்:
வடசென்னை அனல் மின் நிலையத்தில் மொத்த உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளதால், சென்னை மட்டுமல்லாது தமிழகத்தின் பிற பகுதிகளிலும் மின்வெட்டு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.