உலக செஸ் போட்டிக்கு சென்னை மாணவர்கள் தேர்வு
ரஷ்யாவில் நடைபெற உள்ள பள்ளிகள் இடையிலான செஸ் போட்டியில் பங்கேற்க சென்னை வேலம்மாள் பள்ளியை சேர்ந்த 4 மாணவர்கள் தேர்வாகி உள்ளனர்.
பள்ளிகள் இடையிலான உலக செஸ் போட்டி ரஷ்யாவில் வரும் ஜூன் 1-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் இந்தியா உட்பட 10 நாடுகள் கலந்து கொள்கின்றன. இந்தியா சார்பில் சென்னை அயனம்பாக்கம் வேலம்மாள் வித்யாலயா பள்ளி கலந்து கொள்கிறது.
இந்த பள்ளியில் பயிலும் 6-ம் வகுப்பு மாணவர்களான வெ.பிரணவ், ர.குகேஷ், 7-ம் வகுப்பு மாணவர் மென்டோன்கா லியான் லூக் மற்றும் மாணவி ரக் ஷிதா ரவி ஆகியோர் ரஷ்ய போட்டியில் கலந்து கொள்ள தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் ரக் ஷிதா ரவி சமீபத்தில் தாஷ்கண்டில் நடைபெற்ற ஆசிய இளைஞர்கள் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கம் வென்றிருந்தார். மற்ற 3 மாணவர்களும் அனைத்து இந்திய செஸ் கூட்டமைப்பின் விதிகளுக்குட்பட்டு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக் கப்பட்டுள்ளது.
மேலும் இந்த 4 மாணவர்களும் எப்ஐடிஇ ரேட்டிங் அடிப்படையில் ரஷ்யாவில் நடைபெறும் உலக செஸ் போட்டிக்கு தேர்வாகி உள்ளதாகவும் அனைத்து இந்திய செஸ் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.