மாவோயிஸ்ட்கள் தாக்குதலில் இறந்த சிஆர்பிஎப் வீரர்கள் குழந்தைகளின் கல்வி செலவை ஏற்றார் காம்பீர்
சத்தீஷ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் உள்ள பஸ்பதர் பகுதியல் மாவோயிஸ்ட்கள் கடந்த திங்கள்கிழமை நடத்திய தாக்குல் நடத்தினார்கள். இதில் சிஆர்பிஎப் வீரர்கள் 25 பேர் மரணமடைந்தார்கள்.
இந்நிலையில் இந்த தாக்குதலின் போது மரணம் அடைந்த 25 வீரர் களின் குழந்தைகளின் கல்விக்கு உதவி செய்ய இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் முன்வந்துள் ளார். 25 வீரர்களின் குழந்தைகளின் கல்வி செலவு முழுவதையும் தான் ஏற்றுக்கொள்வதாக காம்பீர் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக காம்பீர் தனது ட்விட்டர் பதிவில், “மாவோயிஸ்ட் தாக்குதலில் வீரமரணம் அடைந்த சிஆர்பிஎப் வீரர்களின் குழந்தை களின் கல்விக்கு ஆகும் முழுசெல வையும், கவுதம் காம்பீர் அறக் கட்டளை ஏற்றுக்கொள்ளும். இதற்கான பணிகளை என்னுடைய குழு தொடங்கிவிட்டது.
தாக்குதலில் உயிரிழந்த இரு சிஆர்பிஎப் வீரர்களின் பெண் குழந்தைகள் கதறி அழும் மிகவும் துயரமான புகைப்படங்களை பத்திரி கையில் பார்த்தேன். நாட்டுக்காக சேவை செய்யும் வீரரை இழப்பதை ஒருபோதும் கிரிக்கெட் ஆட்டத்தில் தோல்வியை சந்திப்பதுடன் ஒப்பிட முடியாது” என பதிவிட்டுள்ளார்.
கடந்த புதன்கிழமை ஐபிஎல் தொடரில் புனே அணிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா அணியினர், உயிழந்த சிஆர்பிஎப் வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக கையில் கருப்பு பட்டை அணிந்து பங்கேற்றனர்.