மத்திய தபால் துறையில் வேலை வேண்டுமா?
நிறுவனம்:
மத்திய தபால் துறை
வேலை:
கிராம தபால் சேவகர் பணி
காலியிடங்கள்:
128 இந்தப் பணியிடங்கள். கடலூர்(37), திருவண்ணாமலை(40), திருநெல்வேலி(27) மற்றும் மேற்குச் சேலம்(24) இடங்களில் பணியிடங்கள் உள்ளன. இதில் இட ஒதுக்கீடு முறையில் பொதுப் பிரிவுக்கு 71 இடங்களும், ஓ.பி.சி பிரிவினருக்கு 39 இடங்களும், எஸ்.சி; எஸ்.டி பிரிவினர், மாற்றுத் திறனாளிகளுக்கும் 18 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
கல்வித் தகுதி:
10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்லாம்.
வயது வரம்பு:
18 முதல் 40 வயதிற்குள் இருப்பது அவசியம். ஓ.பி.சி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
தேர்வு முறை:
மெரிட் அடிப்படையில் தகுதி யானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 9.5.17
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியுள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். பொது மற்றும் ஓ.பி.சி பிரிவினர் ரூ.100 செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். பெண் விண்ணப்பதாரர்கள், எஸ்.சி, எஸ்.டி பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.
மேலும் விவரங்களுக்கு: https://indiapost.gov.in மற்றும் https://appost.in/gdsonline என்ற இணையதளங்களைப் பார்க்கலாம்.