மத்திய ஆயுதப்படையில் வேலை வேண்டுமா ?
நிறுவனம்:
மத்திய ஆயுதப் படை (C.A.P.F)
வேலை:
உதவி கமாண்டன்ட் பணி
காலியிடங்கள்:
179. மத்திய ஆயுதப்படைப் பிரிவின் கீழ் எல்லைக்காவல் படை, ரிசர்வ் போலீஸ் படை, தொழிற்சாலைப் பாதுகாப்புப் படை மற்றும் எஸ்.எஸ்.பி போன்ற பிரிவுகள் இங்கு இயங்குகின்றன.
கல்வித் தகுதி:
அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். என்.சி.சியில் ‘பி’ அல்லது ‘சி’ சான்றிதழ் பெற்று இருந்தால் சிறப்புத் தகுதியாகக் கருதப்படும்.
உடல் தகுதி:
ஆயுதப் படை பிரிவில் வேலை என்பதால், அவர்கள் குறிப்பிட்ட உடல் தகுதிகளைப் பெற்று இருக்க வேண்டும். ஆண் என்றால், குறைந்தபட்சம் 165 செ.மீ உயரமும், பெண்கள் 157 செ.மீ உயரம் இருக்க வேண்டும். ஆண்களின் மார்பளவு சாதாரண நிலையில் 81 செ.மீ, விரியும் நிலையில் 5 செ.மீ கூடுதலாக இருப்பது அவசியம். ஆண்கள் குறைந்த பட்சம் 50 கிலோ எடை, பெண்கள் 46 கிலோ எடை இருப்பது அவசியம்.
வயது வரம்பு:
20 வயது பூர்த்தி அடைந்து இருக்க வேண்டும். அதே சமயம் 25 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். 2-8-1992 மற்றும் 1-8-1997 தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்து இருப்பவர்களாக இருக்க வேண்டும்.
தேர்வு முறை:
எழுத்துத் தேர்வு, நேர்க்காணல், ஆளுமைத்திறன் பேட்டி, உடல்திறன் தேர்வு, மருத்துவப் பரிசோதனை இதன் அடிப்டையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 5.5.17
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியுள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். பொது மற்றும் ஓ.பி.சி பிரிவினர் ரூ.200 செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். பெண் விண்ணப்பதாரர்கள், எஸ்.சி; எஸ்.டி பிரிவினர் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.
மேலும் விவரங்களுக்கு: www.upsc.gov.in மற்றும் www.upsconline.nic.in என்ற இணையதளங்களை பார்க்கலாம்.