சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் 7 பேருக்கு மன நிலை மருத்துவர்கள் பரிசோதனை செய்ய நீதிபதி கர்ணன் உத்தரவு
கொல்கத்தா ஐகோர்ட்டு நீதிபதியாக உள்ளவர், தமிழ்நாட்டின் சி.எஸ். கர்ணன். இவர், சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சய் கிஷன் கவுல் உள்ளிட்ட பல நீதிபதிகள் மீது ஊழல் புகார் கூறியதைத் தொடர்ந்து, சுப்ரீம் கோர்ட்டு தாமாக முன்வந்து இவர் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்த வழக்கில் சம்மன் பெற்றும் ஆஜராகாத நிலையில், பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து நீதிபதி கர்ணன் கடந்த மாதம் 31–ந்தேதி சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தலைமையில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஜே.செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், மதன் பி.லோகுர், பினாகி சந்திர கோஷ், குரியன் ஜோசப் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு முன்னிலையில் ஆஜர் ஆனார். இந்த வழக்கில் நீதிபதி கர்ணன் தன்மீதான குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்க 4 வாரம் அவகாசம் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த நிலையில் நீதிபதி கர்ணன், சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதிகள் 7 பேரும் , தன் முன்பு ஆஜராக வேண்டும் என்று கூட உத்தரவிட்டார்.இது போல்
நீதிபதி கர்ணன் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளுக்கு எதிராக பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து பரபரப்பை ஏற்படுத்தி வந்தார்.
இந்த நிலையில் மேற்குவங்காள கொலகத்தா ஐகோர்ட் நீதிபதி கர்ணனுக்கு மன நலம் தொடர்பான மருத்துவ சோதனை நடத்த சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. வரும் 5 ம் தேதி இந்த சோதனையை நடத்த வேண்டும் என்றும் நீதிபதிகள் ஆணையிட்டுள்ளனர்.
இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் 7 பேருக்கு மனநல மருத்துவர்கள் பரிசோதனை செய்ய வேண்டும்.என அதிரடியாக கர்ணன் உத்த்ரவிட்டு உள்ளார். மேலும் எய்ம்ஸ் நல மருத்துவர்கள் பரிசோதனை நடத்த வேண்டும். மருத்துவ அறிக்கையை மே 8 ந்தேதிக்கு முன் சமர்பிக்க வேண்டும்என டெல்லி டிஜிபி இதற்கான செயல்பாடுகளை முன்னெடுத்து செல்ல வேண்டும் என கர்ணன் உத்தரவிட்டு உள்ளார்.